fbpx

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி..!! சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா..!!

9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பான் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சீனா – தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சீனா வெற்றி பெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின. இந்நிலையில், இறுதிப் போட்டியில் சீனாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டி சமனில் முடிந்த நிலையில், ஹூட் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது.

Read More : ”என்னது அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டேனா”..? தீயாய் பரவிய தகவல்..!! பதறியடித்து விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்..!!

English Summary

India won the Women’s Junior Asia Cup Hockey title by defeating China 4-2 in the final.

Chella

Next Post

பிறந்தது மார்கழி..!! இப்படி வழிபட்டால் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையாக அமையும்..!!

Mon Dec 16 , 2024
As the month of Margazhi begins today, certain rituals we perform will make a huge difference in our lives.

You May Like