fbpx

பெண்களின் வலி போக்கும் பிரண்டை!… பிரமிக்க வைக்கும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்!

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. மேலும், இதன் பயன்கள் குறித்து பார்க்கலாம்

உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கள், பழங்கள், கீரைகள், தண்டுகள் வேர்கள் என பல்வேறு தாவர இனங்களையும் உணவாக சமைத்து உண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். அந்த விதத்தில், நாம் மறந்துவிட்ட ஒரு மருத்துவ குணமிக்க தாவரம்தான் பிரண்டை! பிரண்டையின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் மகத்துவங்களை இதில் அறிந்துகொள்வோம்

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும். வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது. பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும். இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
உள் மற்றும் வெளி மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது. பிரண்டையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் விலகும்

வாதநோய், கபநோய் உள்ளவர்கள் வாரம் இருமுறை பிரண்டை பயன்படுத்தினால் வாத கப தோஷம் கட்டுப்படும். பித்தத்தை அதிகபடுத்தும் குணம் கொண்டது. எனவே பிதசம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. வயிற்றுப் பொருமல் நீங்கும். வாயுத்தொல்லை அகலும். சுவையின்மை போகும். நன்கு பசியெடுக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்தை பலப்படுத்தும்.

Kokila

Next Post

இறந்துவிடும் என்று தெரிந்தே குழந்தையை பெற்றெடுக்கும் அவலம்!... புளோரிடாவின் கருக்கலைப்பு சட்டத்தால் பெற்றோர் வேதனை!

Mon Feb 20 , 2023
புளோரிடாவின் புதிய கருக்கலைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பிறந்தவுடன் இறந்துவிடும் என்று தெரிந்தே குழந்தையை பெற்றெடுக்கவேண்டிய நிலை அமெரிக்காவை சேர்ந்த தம்பதிக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் நாடு தழுவிய கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்ததை அடுத்து, புளோரிடாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கரு மற்றும் குழந்தை இறப்புக் குறைப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், கருவுற்ற 15 […]

You May Like