fbpx

புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்..!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால். நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏற்கனவே நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது.

இன்றைய தினத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், பழைய பாராளுமன்றத்தில் இருந்து புதிய பாராளுமன்றத்துக்கு இடமாற்றம் செய்தனர். மதியம் 12.55 மணிக்கு பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட புத்தக நகலை ஏந்தியபடி முன் வரிசையில் நடந்து செல்ல எம்.பி.க்கள் அனைவரும் தொடர்ந்து சென்றனர். இந்நிலையில் புதிய நாடளுமன்றத்தில் முதலில் மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இந்த மசோதா குறித்து பேசுகையில் ஒரு மனதாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த மசோதா குறித்து விவாதம் நாளை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kathir

Next Post

நிஃபா வைரஸ் இவ்வளவு கொடூரமானதா..? 48 மணி நேரத்திற்குள் கோமா நிலை..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Tue Sep 19 , 2023
கேரள மாநிலத்தில் பரவி வரும் நிஃபா வைரஸ் வௌவால் மூலம் பரவும் நோயாகும். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 1998இல் முதல் நிபா வைரஸ் பரவியது. அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கிராமத்தின் பெயரே வைரஸுக்கு சூட்டப்பட்டது. கேரளாவில் நிபா வைரஸ் பரவுவது இது 4-வது முறையாகும். நாட்டின் பிற மாவட்டங்கள் அல்லது பிற பகுதிகளில் நோய் பரவுவதைத் தடுக்க வெகுஜன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40-75% […]

You May Like