fbpx

மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு..!! இந்த தேதிதான் கடைசி..!! லேட் பண்ணாதீங்க..!!

மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது, இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோர் தாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதி இருக்கும்பட்சத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகையைப் பொறுத்தவரை இப்போது 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 15ஆம் தேதி உரிமை தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 55 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்களின் விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் வரும் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வரும் நாட்களில் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்று தெரிகிறது.

Chella

Next Post

’இன்னைக்கு சம்பவம் வெயிட்டா இருக்கும்போல’..!! ’நீங்க வெளிய போனதும் என் பசங்க சும்மா விட மாட்டாங்க’..!!

Fri Oct 6 , 2023
பிக்பாஸ் 7-வது சீசன் அக்.1ஆம் தேதி தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக நிகழ்ச்சி தொடங்கிய 2-வது நாளில் இருந்தே சண்டை நடக்கிறது. குறிப்பாக பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா இடையே அடிக்கடி முட்டிக்கொள்கிறது. வீட்டில் இருக்கும் பலரும் விஜய் வர்மாவிற்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் வர்மா, பிரதீப் வேண்டும் என்றே ஷூவால் என்னை […]

You May Like