fbpx

மகளிர் உரிமைத்தொகை..!! இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், உரிமைத்தொகை ஒரு கோடி பேருக்கு தான் என்ற எந்தவித இலக்கும் கிடையாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு கடந்த 15ஆம் தேதியன்று அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.

இதனை சரி செய்து அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. மகளிர் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெண்கள் பலரும் இ-சேவை மையத்தில் குவிந்து வருகின்றனர்.

மேலும் விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://kmut.tn.gov.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடி பேருக்கு தான் என்ற எந்தவித இலக்கும் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் தகுதி இருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். தகுதி இருப்பவர்கள் அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”ஒரு வாரத்தில் புதிய மின் இணைப்பு”..!! ”தாமதமானால் நுகர்வோருக்கு இழப்பீடு”..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Fri Sep 22 , 2023
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மே மாதத்தில் மின்சார விநியோக சட்டத்தில் திருத்தம் செய்ய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், புதிய மின் இணைப்பு கோரிய 7 நாட்களில் மின் இணைப்பை வழங்காவிட்டால் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ”அனைத்து கட்டுமானப் பணிகளும் தயார் நிலையில் இருந்து புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் புதிய நுகர்வோருக்கு ஒரு வாரத்தில் […]

You May Like