தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தற்போது செயல்பட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, 11.5 லட்சம் பேர் முறையீடு செய்திருந்த நிலையில், அதில் இரண்டு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல், மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000, வரும் 10ஆம் தேதியே தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.