fbpx

மகளிர் உரிமைத்தொகை..!! மேல்முறையீடு செய்தவர்களுக்கு ரூ.4,000 வரப்போகுது..!! வெளியான செம குட் நியூஸ்..!!

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.65 கோடி மகளிர் முதல்கட்ட பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய் அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி, மேலும் 5,041 தகுதியான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டனர். உரிமைத் தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த மாதமும் கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் கைப்பேசி எண்களுக்கு அரசு ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை பெண்களிடம் கேட்டு அது சரியா என உறுதிபடுத்தி, விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது.

அதே சமயம் பல மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த மாதமும் பணம் வரவில்லை. அக்டோபர் 25 ஆம் தேதி வரை 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், தகுதியானவர்களுக்கு வரும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் தங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விண்ணப்பம் ஏற்கப்படுமா என்று குடும்பத் தலைவிகள் குறுஞ்செய்திக்காக எதிர்பார்த்து காத்து உள்ளனர். மேலும், இதுவரை விடுபட்ட மாதங்களுக்கான (செப்., அக்., நவ) ஆகிய 3 மாத தொகையுடன் டிசம்பரில் ரூ.4,000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

இன்று 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

Sat Nov 25 , 2023
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், […]

You May Like