fbpx

மகளிர் உரிமைத்தொகை..!! விண்ணப்பதாரர்களுக்கு டோக்கன்..!! ஜெராக்ஸ் எடுக்க முடியாது..!! மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!!

தமிழ்நாட்டில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே, இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்துவதால் இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை பெறும் பயனாளிகளை கண்டறிவது தொடர்பாக அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்தான் இந்த உரிமைத் தொகையை பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பயனாளிக்கு 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்காக வருமான சான்றிதழ் எல்லாம் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு ரேஷன் கடை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பயனாளிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தினர் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து தனி பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. அதன் மூலம் தகுதியான பயனாளிகளை கண்டுபிடிக்க முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி கூறுகையில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனி எண்களுடன் விண்ணப்பம் தயாரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அச்சடிக்க கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்கள் அச்சடித்து முடித்ததும் அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனித்தனியாக பிரிப்பார்கள். பின்னர் அந்த விண்ணப்ப படிவங்கள் வீடு வீடாக வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களில் ரேஷன் கார்டு எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும்.

அதில் எந்த தேதியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, விண்ணப்பங்களை கொடுக்க முந்த வேண்டிய அவசியமே இல்லை. விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போதே தங்களுக்கு ரூ.1,000 கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரியவந்துவிடும். இந்த விண்ணப்பங்களில் எவையெல்லாம் மாதம் ரூ.1,000 பெற தகுதியிருக்கிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வர்.

ஒரு குடும்பத்திற்கு வழங்கும் படிவத்தை மற்ற குடும்பத்தினர் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு எண் வழங்கப்பட்டிருக்கும். எனவே, ஒரு விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து அதை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. எந்த பொருளும் வேண்டாம் என எழுதி கொடுத்திருப்பவர்களில் யாராவது உரிமைத் தொகை பெற விரும்பினால் அவர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். இவையெல்லாம் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். விண்ணப்பங்களை வாங்கித் தருகிறேன், ஃபில்லப் செய்து தருகிறேன் என பெண்களை இடைத்தரகர்கள் ஏமாற்ற வேண்டிய வேலையே இருக்காது. காரணம் படிவத்தை வீட்டுக்கே சென்று கொடுக்கிறோம்” என்றார்.

Chella

Next Post

கள்ளத்தொடர்பால் தூக்கில் தொங்கிய பெண்..!! கத்தியை எடுத்த மகள்..!! சரிந்து விழுந்த உடல்..!! எடப்பாடியில் அதிர்ச்சி..!!

Mon Jul 10 , 2023
சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் தொப்பக்காடு பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி, என்பவருக்கும் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த மீனா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 11 வயதில் தரணிஷ் என்ற மகனும், 9 வயதில் தர்ஷினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 2016இல் கணவன் வேலுச்சாமி உயிரிழந்த நிலையில், மகன் தரணீஷ் இரும்பாலையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளான். […]

You May Like