ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா.
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி ஹாங்சோ நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். ஆனால், அடுத்து வந்த வீராங்கனைகள் நிலைத்து நின்று விளையாடவில்லை.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணி வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 97 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. ராஜேஷ்வரி கெய்க்வாட் 2, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரக்கர், தேவிகா வைத்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.