செலவுக்கு பணம் தராததால் பாட்டியை பேத்தியே கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் கொலை செய்ததாக நடகமாடியது விசாரணையில் அம்பலமானது.
தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவடை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55). இவரது பேத்தி ஜெயலட்சுமி. இவரின் தாய் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து மாதந்தோறும் செல்வமணிக்கு ரூ.30,000 அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், தனது பாட்டியான செல்வமணியிடம் பேத்தி ஜெயலட்சுமி செலவுக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர பாட்டி மறுத்துவிட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, தனது பாட்டியை தள்ளிவிட்டதில் கடந்த 23ஆம் தேதி இரவு உயிரிழந்துள்ளார்.
அதன்பின், ஜெயலட்சுமியின் உடலை பானைக்குள் திணித்துவிட்டு வீட்டையும் பூட்டிவிட்டு தனது ஊரான வீரசிங்கம்பேட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், செல்வமணி பாட்டிக்கு போன் செய்ததாகவும், அவர் எடுக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்ததாகவும், வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாட்டி இறந்து கிடந்ததாக பேத்தி ஜெயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், பாட்டியை பேத்தியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயலட்சுமியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.