fbpx

பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் செய்த வேலை; வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சபை நடவடிக்கையின்போது, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ராகேஷ் கோஸ்வாமி செல்போனில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

மற்றொரு எம்.எல்.ஏ., தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார். இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவுடன், “சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள்!, என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், அத்துடன் மஹோபாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சபையில் செல்போனில் கேம் விளையாடுகிறார். ஜான்சியின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. புகையிலை சாப்பிடுகிறார். இவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் இல்லை. சட்டப்பேரவையை பொழுது போக்கு இடமாக வைத்துள்ளனர். இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது!” என்று பதிவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

Rupa

Next Post

எலக்ட்ரிக் வாகனங்களின் தொடர் விபத்து எதிரொலி.. அக்.1 முதல் புதிய விதிகள் அமல்..

Sat Sep 24 , 2022
நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் இரு சக்கர வாகனங்களின் பங்கு 15 சதவீதமாக இருக்கும். இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்சார ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் தரம் குறித்த புதிய விதியை […]

You May Like