தமிழகத்தில் சென்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்சமயம் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையை தான் அரசு பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களின் பணி காலம் ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி சில தினங்கள் மட்டுமே சென்றுள்ள நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிப்படைய கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை சென்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற சுமார் 1000 ஆசிரியர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்கி நியமன ஆணையை பிறப்பித்திருக்கிறது.
ஆகவே ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டு முடியும் வரை தங்களுடைய கற்பிக்கும் பணியை தொடர்ந்து செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கற்றல் கற்பித்தல் பணி எந்த விதமான இடையூறும் இன்றி தொடரும் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியை அடைந்திருக்கின்றனர்.