fbpx

’இனி 12 மணி நேரம் வேலை’..!! ’3 நாட்கள் விடுமுறை’..!! பட்ஜெட்டில் புதிய அறிவிப்பை வெளியிடுகிறது மத்திய அரசு..?

2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி சமீபத்தில் இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், 6 நாள் வேலை என்று வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் மத்திய அரசு 2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 3 நாள் விடுமுறை கொள்கையை அறிமுகப்படுத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல், நிறுவனங்கள் வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்க முடியும். ஊழியர்கள் ஒரு நாளைக்கு 10-12 மணிநேரம் 4 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த புதிய விதிகளுக்குப் பிறகு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க முடியும். கடந்த பட்ஜெட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்போது அந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது வேலை நேரம் 8 மணி நேரம் என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கடுமையான எதிர்ப்புகள் காரணமாக இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் இந்த மசோதா அமலுக்கே வரவில்லை. இந்நிலையில், இந்த 2024 மத்திய பட்ஜெட்டில் வேலை நேரம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

Chella

Next Post

வறுத்த 6 பூண்டுகள் மட்டும் போதும்..!! உடல்களில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா..?

Tue Jan 30 , 2024
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து […]

You May Like