வெப்பம் அதிகமாக உள்ள துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும். மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி, சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அறிவுறுத்தல்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா..? என்பதை துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும். அறிவுறுத்தல்களை மீறும் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.