fbpx

’வேலைக்கு ஆட்கள் தேவை’..!! ஊதியத்துடன் பயிற்சி..!! கை நிறைய சம்பளம்..!! நித்தியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக அறிவித்த நித்தியானந்தா, வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா அறிவித்தார். கைலாசா என்ற நாட்டின் அதிபராக இருப்பதாக கூறிய இவர், நிர்வாக ரீதியாக நாட்டிற்கான அமைச்சர்கள் பெயர்களையும் அறிவித்தார். மேலும், கைலைசா நாட்டிற்காக தனி வங்கி, தனி பணம் என்று கூறினார். ஆனால், அந்த நாடு எங்கு உள்ளது, எப்படி இருக்கும் என்ற எந்த தகவலையும் இதுவரை பொதுவெளியில் கூறியதே இல்லை.

’வேலைக்கு ஆட்கள் தேவை’..!! ஊதியத்துடன் பயிற்சி..!! கை நிறைய சம்பளம்..!! நித்தியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

நித்தியானந்தாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு தீவில் பதுங்கியிருக்கும் அவர் எந்த நாட்டிற்கும் விமானத்தில் செல்ல முடியாதபடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள தனது ஆசிரமங்களில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவை என்று அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எலெக்ட்ரிக்கல், பிளம்மிங் பணிகளுக்கும், தூதரக பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

’வேலைக்கு ஆட்கள் தேவை’..!! ஊதியத்துடன் பயிற்சி..!! கை நிறைய சம்பளம்..!! நித்தியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

பணியில் சேர்வோருக்கு ஊதியத்துடன் பயிற்சி கொடுக்கப்பட்டு பல்வேறு ஆசிரமங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே நித்தியானந்தாவிடம் பல்வேறு வகையில் சிக்கி ஏமாற்றப்பட்டவர்கள் இதை பார்த்து மேலும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

அமேசான் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!! 10,000 ஊழியர்கள் பணிநீக்கம்..!! அதிர்ச்சி

Tue Nov 15 , 2022
அமேசான் நிறுவனம் நஷ்டத்தை சந்திப்பதால், அதன் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த சில காலாண்டுகள் லாபகரமாக இல்லாததால், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் முதல் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கை சுமார் 10,000-ஆக இருந்தால், அது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய […]

You May Like