fbpx

வேலைவாய்ப்பு!… பொய்யான செய்திகளை நம்பாதீர்கள் – சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல்!

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றி வாட்ஸ் அப் மூலம் பரவும் பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ இரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகள் மற்றும் விளம்பரங்களை நம்பி, அதிகார பூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

Disney+ Hotstar-க்கு அடுத்த ஷாக்!... இனி ஜியோ சினிமாவில் ஹாலிவுட் நிகழ்ச்சிகள் பார்க்கலாம்!... வருடத்திற்கு ரூ. 999 சந்தா!

Sun May 14 , 2023
இந்தியாவில் ஜியோ சினிமா அதன் பிரீமியம் சந்தா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு வருடத்திற்கு ரூ.999 பிரீமியம் விலை என அறிவிக்கப்பட்டுள்ளது. Jio Cinema தற்போது இலவசமாக வழங்கப்பட்டுவந்தாலும் நடந்துகொண்டிருக்கும் ஐபில் 2023 தொடர் முடிவடைந்ததும் சந்தா தொகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக பயனர்களுக்கு அதிகப்படியான நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.ஏற்கனவே ஜியோ சினிமா மூலம் FIFA World cup மற்றும் […]

You May Like