fbpx

உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்கள்..!! பதைபதைக்கும் வீடியோ காட்சி..!!

உலகின் பெரும் பணக்காரர்கள் முதல் சாமானியர்கள் வரை பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கு பின்னணியிலும் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைக்கும் தொழிலாளியின் பங்கு அளப்பரியதாக இருக்கும். உணவு உள்ளிட்ட மிக அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சுரங்க வேலைகளில் ஈடுபடுவோரின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கும். ஏனெனில் பூமிக்கு கீழே செல்ல செல்ல இருள் சூழ்ந்ததாக இருக்கும். அதேபோல், ஆக்ஸிஜன் அளவில் பூமியின் மேற்பரப்பில் இருப்பது போல் இருக்காது. திடீரென சரிவு ஏற்பட்டால் மீட்புகள் மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. உயிரிழப்புகளை குறைக்க முடியுமே தவிர தடுக்க முடியாது. 

இதுப்போன்ற சுரங்கத் தொழில்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலேயே நடைபெறும். அதில் பெரும் பகுதி மக்கள் கானா நாட்டில் உள்ள சுரங்கத்தில் பணியாற்றுகின்றனர். நித்தமும் உயிரை துச்சமாக எண்ணி தாமிரம், கோபால்ட் போன்ற தாதுக்களை தோண்டி எடுக்க ஓடாய் தேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள் உழைப்பாளிகள். வேலையில் ஈடுபடும் போது சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டாலோ, ஏதேனும் விபத்து நேர்ந்தாலோ அதற்கு பொறுப்பேற்கவோ, அவர்களின் உயிரை காப்பாற்றவோ எவரும் இருக்க மாட்டார்கள். தனக்குத்தானே கூட்டைக் கட்டிக்கொள்ளும் பறவையினம் போல மண் சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டால் அதனை ஏதோ திருவிழா போல ஆரவாரம் செய்து மகிழ்கிறார்கள் சக சுரங்க தொழிலாளர்கள்.

அப்படியான நிகழ்வு ஒன்று காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் லுவின்ஜாவில் உள்ள சுரங்கத்தில் நடந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு கிட்டத்தட்ட 80 லட்சத்துக்கும் மேலானோரின் ஆதங்கத்தையும், அனுதாபத்தையும் பெற்று வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான பெர்னி ஸ்போஃர்த் என்ற பெண் கடுமையாக சாடியிருக்கிறார். அதில், “எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புகளுக்காக கோபால்ட் தாதுக்களை தோண்டி எடுக்க சில பெரு நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணியமர்த்தி அவர்களது உயிர்களையும் காவு வாங்கி வருகிறது.

இதுப்போன்ற சுரங்கங்கள் அடிக்கடி இடிந்தும், சரிந்தும் விழுகின்றன. இதில் சிக்குவோர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தால் அவர்களை தொழிலாளர்களே தோண்டி மீட்டுக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் பல உயிர்கள் பலிகடா ஆனாலென்ன? அதான் உலகம் பிழைத்துக் கொள்கிறதல்லவா?” என காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

https://twitter.com/MvembaDizolele/status/1639379727109754882?s=20

Chella

Next Post

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள EPFO.. பிஎஃப் பயனர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி..

Mon Mar 27 , 2023
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரியத் தொடங்கின.. எனினும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமம், இந்தியாவின் வளர்ச்சி மீதான தாக்குதல் என்றும், அந்நிறுவனம் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.. ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கைக்குப் பிறகு பல பெரிய முதலீட்டாளர்கள் […]

You May Like