fbpx

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை..!! அதுவும் “Work From Home”..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணிபுரியலாம்.

முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், நம் நாட்டிலும் அதன் கிளைகள் உள்ளது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால், கோடிங் லேங்குவேஜில் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் மட்டுமின்றி பிறவற்றையும் தெரிந்து பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பிப்போருக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான Fundamentals தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி, மாதம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட உள்ளது. சம்பளம் பற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். இந்த அறிவிப்பானது கேரளாவை மையப்படுத்தி வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் ‘வொர்க் ப்ரம் ஹோம்’ முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய https://www.linkedin.com/jobs/view/4058440985/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH&original_referer=https%3A%2F%2Fm.dailyhunt.in%2F லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.

Read More : ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!! மத்திய அரசு சொன்ன செம குட் நியூஸ்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Candidates are going to be selected for the job of Software Engineer in Microsoft. Candidates can work from home instead of going to office.

Chella

Next Post

தீபாவளிக்கு மறுநாள்..!! அனைத்து இறைச்சி கடைகளையும் மூட அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?

Tue Oct 29 , 2024
It has been announced that the butcher shops will be closed on November 1st, on the occasion of Mahavir Nirwan Day.

You May Like