fbpx

உலக தடகள சாம்பியன்ஷிப்!… தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா!…

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.77 மீ., துாரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான மானு , கிஷோர் ஆகியோரும் பைனலுக்கு முன்னேறினர்.இந்நிலையில், இன்று நடந்த பைனலில், தனது 2வது முயற்சியில் 88.17 மீ., தூரம் வீசிய நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

இதன் மூலம், இந்தியாவுக்கு உலக தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார். மேலும், உலக தடகளத்தில் இரு பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அவர் கடந்த முறை (2022, அமெரிக்கா) வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கிஷோர் 5வது இடமும், மானு 6வது இடமும் பிடித்தனர். பாகிஸ்தான் வீரர் நதீம் வெள்ளி வென்றார். செக் குடியரசை சேர்ந்த ஜாகுப் வெண்கலம் வென்றார்.

Kokila

Next Post

பாஜக ஊழல் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின்...! திருப்பி பதிலடி கொடுத்த அண்ணாமலை...!

Mon Aug 28 , 2023
திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராஜின் மகள் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊழல் குறித்து பேசும் தார்மீக உரிமை பிரதமருக்கு இல்லை என்று கூறினார். மத்திய பாஜக அரசின் ஊழல் செயல்களை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது என கூறினார் ‌ பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்துப் […]

You May Like