ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கும் தேதியை ஐசிசி அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ள நிலையில், டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கப்பட இருக்கிறது. சென்னையில் நடக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேபோல், இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும். ஆன்லைன் டிக்கெட்களை https://cricketworldcup.com/register என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
ஒருநாள் உலகக்கோப்பை 2023 போட்டியானது அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்திற்கும் டிக்கெட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான டிக்கெட் வரும் 25ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி எதிர்த்து விளையாடுகிறது. இந்த இரு அணிகளும் சென்னையில் நேருக்கு நேர் மோதுகின்றன.