fbpx

உலகக்கோப்பை வில்வித்தை போட்டி!… 3வது முறையாக தங்கம் வென்ற இந்திய வீரர் அபிஷேக் வர்மா!

கொலம்பியக் குடியரசில் நடந்த உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

கொலம்பியக் குடியரசில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர், நெதர்லாந்தின் ஸ்க்லோசர், பிரேசிலின் லூகாஸ் மற்றும் அமெரிக்காவின் ஜேஸ்ம் ஆகியோரை 148 – 148, 143 – 148 மற்றும் 146 – 148 ஆகிய நேர்செட் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.இந்த வெற்றியின் மூலமாக உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் முதன் முதலாக தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த போட்டியில் 2ஆவது முறையாக தங்கம் வென்றார். இது தவிர உலகக் கோப்பை வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் 2 வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கமும் கைப்பற்றியிருக்கிறார்.

Kokila

Next Post

மனித உணர்வுகளை கொண்ட ரோபோ!... அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!... வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!

Tue Jun 20 , 2023
மனிதனை போன்ற உணர்வுகள் கொண்ட ரோபோவை அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நமது உலகில் விஞ்ஞானமானது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் ஒரு படியாக விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அது என்னவென்றால் வியர்வை, நடுக்கம் மற்றும் மூச்சு விடுதல் போன்ற உணர்வுகள் அடங்கிய ஒரு புதுவித ரோபோவை உருவாக்கி உள்ளனர். இந்த ரோபோ ஆன்ட்டி (ANDI) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதுமையான ரோபோவை […]

You May Like