fbpx

உலகக் கோப்பை செஸ் தொடர்!… அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

உலகக்கோப்பை செஸ் தொடரில் சக வீரரான அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பெய்ஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில், ‘நாக் அவுட்’ முறையில் நடைபெற்ற இத்தொடரின் காலிறுதியில் இந்தியாவின் குகேஷ், விதித் தோல்வியடைந்தனர். மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அர்ஜுன் மோதினர். 2 போட்டி கொண்ட இதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற ஸ்கோர் 1.0-1.0 என ஆனது.

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘டை பிரேக்கருக்கு’ சென்றது. இதன் முதல் ‘டை பிரேக்கரின்’ இரு போட்டி டிரா’ ஆனது. அடுத்த இரு போட்டியில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் மாறி மாறி வெற்றி பெற, ஸ்கோர் 3.0-3.0 என ஆனது. மூன்றாவது ‘டை பிரேக்கரின்’ முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற மீண்டும் இருவரும் சமநிலை (4.0-4.0) அடைந்தனர். இதையடுத்து சடன் டெத் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் வெள்ளை நிறகாய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா , 73வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 5.0-4.0 என வென்ற பிரக்ஞானந்தா, உலக கோப்பை செஸ் தொடரில் ஆனந்திற்குப் பின், அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதில் உலகின் ‘நம்பர்-3’ வீரர் பேபியானோ காருணாவை (அமெரிக்கா) சந்திக்கவுள்ளார். தவிர உலக செஸ் சாம்பியன்ஷிப் தகுதி போட்டியான கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பிரக்ஞானந்தா உறுதி செய்தார்.

Kokila

Next Post

பெங்களூரு -ஓசூர் மெட்ரோ, இது நடந்தால் எங்களின் பலத்தை இழக்கக்கூடும் -கர்நாடக அமைச்சர்..!

Fri Aug 18 , 2023
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு முதல் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் வரை பரிசீலனையில் உள்ள மெட்ரோ திட்டத்தில் கர்நாடக அரசு அதிக அக்கறை காட்டவில்லை என்று கர்நாடக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார். பெங்களூரு -ஓசூர் மெட்ரோ திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், தென்னிந்தியாவின் முதல் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ பாதையாக இது இருக்கும். இது குறித்து அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில் “இந்த திட்டம் […]

You May Like