பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இவர், 252.2 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒகேன் முல்லர் 251.9 புள்ளிகள் உடன் வெளி பதக்கத்தை பெற்றார். சீனாவின் ஜாங் ஜியாலேவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
இதேபோல், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் சிங் 628.2 புள்ளிகளை பெற்று 14-வது இடத்தை பிடித்துள்ளார். பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.