fbpx

உலகக்கோப்பை..!! மாஸ் காட்டிய விராட் கோலி..!! ஒற்றை கேட்ச்சால் புதிய சாதனை..!!

10 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 48 லீக் ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்திய அணி மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் கூட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அலைமோதுகிறது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷல் ஆகியோர் களம் இறங்கினர்.

இந்திய அணியின் சார்பில் முதல் ஓவரை முஹமது சிராஜ் வீசினா. 2-வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ். இந்த கேட்ச் மூலம் உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

உலகக்கோப்பையில் அவர் பிடித்திருக்கும் மொத்த கேட்ச் 15. அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் கும்பிளே 14 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

வீடியோவை காண: https://x.com/KrishnaVK_18/status/1710940972199375084?s=20

Chella

Next Post

"எங்க கள்ளக்காதலை யாராலும் பிரிக்க முடியாது"; தட்டிக்கேட்ட மாமனார்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Sun Oct 8 , 2023
கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள சின்னகள்ளிப்பட்டி அருகே கடுவாய்க்கரையை சேர்ந்தவர் 44 வயதான கனகராஜ். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கனகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இரண்டு பெரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் கள்ளத்தொடர்பு கூறித்து கனகராஜின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த […]

You May Like