fbpx

மூடப்படும் உலகின் பிரபலமான உணவகம்! காரணம் என்ன?

உலக அளவில் மிகப் பிரபலமான நோமா உணவகம் வரும் 2024ஆம் ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் உள்ள நோமா உணவகம் உலக அளவில் புகழ்பெற்ற உணவகம் ஆகும். ரெனே ரெட்ஜெபி என்ற சமையல் கலைஞரால் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், பல ஆண்டுகளாக உலகின் பெஸ்ட் உணவகங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருகிறது. ரெஸ்டாரண்ட்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த பட்டியலில் நோமா உணவகம் 5 முறை முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான உலகின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலிலும் நோமா உணவகம் முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் கொரோனாவின் போது பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில் நோமா உணவகம் வருகிற 2024ஆம் ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நோமா உணவகத்தின் கட்டிடம் வரும் 2025 ஆம் ஆண்டு உணவு கண்டுபிடிப்புகளுக்கான பிரமாண்ட ஆய்வகமாக மாற்றப்படும் என அதன் உரிமையாளர் ரெட்ஜெபி தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

அடித்தது ஜாக்பாட்..!! தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ்..!! முதலமைச்சர் அதிரடி..!!

Thu Jan 12 , 2023
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு  அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றி வருகிறது. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, […]

You May Like