fbpx

உலக ஹாக்கி தரவரிசை பட்டியல்..!! இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..?

உலக ஹாக்கி தரவரிசையில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்ட புள்ளிப் பட்டியலில், நெதர்லாந்து அணி முதலிடத்தையும், பெல்ஜியம் அணி இரண்டாம் இடத்தையும் தக்கவைத்துள்ளது. நான்காவது இடத்தில் இருந்து வந்த இந்தியா தற்போது 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி, நெதர்லாந்து (3113 புள்ளி) முதலிடத்திலும், பெல்ஜியம் (2989 புள்ளி) 2-வது இடத்திலும் இருக்கின்றன.

இந்திய அணி ஒரு இடம் முன்னேறி (2771 புள்ளி) 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு இந்திய அணி ‘டாப்-3’ இடத்துக்குள் வருவது இதுவே முதல்முறையாகும். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் 6 வெற்றி, ஒரு டிரா கண்டதன் மூலம் இந்தியா இந்த ஏற்றம் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி (2745 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடம் பெற்றுள்ளது. ஜெர்மனி (2689), ஆஸ்திரேலியா (2544), அர்ஜென்டினா (2350), ஸ்பெயின் (2347), பிரான்ஸ் (2085), மலேசியா (2041) முறையே 5 முதல் 10 இடங்களில் உள்ளன.

பெண்கள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நெதர்லாந்து அணி (3422) முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி (2818) இரண்டாவது இடத்திலும், அர்ஜென்டினா (2767) மூன்றாவது இடத்திலும், பெல்ஜியம் (2609) நான்காவது இடத்திலும், ஜெர்மனி (2574) 5வது இடத்திலும், இங்கிலாந்து (2327) 6வது இடத்திலும் இருக்கின்றன. இந்திய அணி (2325) ஒரு இடம் அதிகரித்து 7-வது இடத்தை உள்ளது.

Chella

Next Post

 PGIMER ஆணையத்தில், 39000 ரூபாய் சம்பளத்தில், காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு.....! உடனே விண்ணப்பியுங்கள்.....!

Tue Sep 19 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம், அந்த வகையில், இன்றும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை வாசகர்கள் பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த வகையில் இன்று, PGIMER ஆணையத்தில், காலியாக இருக்கின்ற  Senior Resident பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது […]

You May Like