சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிரொலியாக, முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஏற்ப “நான் முதல்வன்” திட்டத்தில் இனி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில், எந்தெந்த துறையில் அதிக முதலீடுகள் வந்தனவோ, அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி வழங்க வேண்டுமென என உத்தரவிடப்பட்டுள்ளது.