fbpx

உலக நாடுகள் அதிர்ச்சி!. 10 ஆண்டுகளில் 3ஆம் உலகப்போர் தொடங்கும்!. ரஷ்ய அமைச்சர் எச்சரிக்கை!

3rd World War: அடுத்த 10 ஆண்டுகளில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆன்ரீவ் பெலவ்சோவ் எச்சரித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா இடையிலானா போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை. அதே சமயம் உலக நாடுகள் பல இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க அதிபராக விரைவில் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், ஏற்கனவே தான் ஆட்சிக்கு வந்தவுடன் உலகில் நடக்கும் அனைத்து போர்களும் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆன்ரீவ் பெலவ்சோவ், அடுத்த 10 ஆண்டுகளில் மூன்றாம் உலகப்போர் நிகழும் என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,” உக்ரைனுடனான ரஷ்ய போர் விரைவில் முடிந்துவிடும். அதன்பிறகு நேட்டோவுடன் ரஷ்யா போர் நடத்தும்.

அடுத்த 10 ஆண்டுகளில் மூன்றாம் உலகப் போர் உருவாகும். உக்ரைனின் லுகான்ஸ், சபோரிகியா, கெர்சான் மற்றும் தோனேட்ஸ் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும். அதன்பிறகு நேட்டோ நாடுகளுடன் போரிடும்” என கூறினார். மேலும் நேட்டோ நாடுகளை சுற்றிய ரஷ்ய எல்லைகளில் ராணுவத்தை நிறுத்தி உள்ளதாகவும், தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமானோரை ரஷ்யா தனது ராணுவத்தில் சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

Readmore: வெளிநாடுகளில் தீவிர ஆய்வு.. அந்த அளவிற்கு முருங்கைக்கீரையில் என்ன இருக்கு தெரியுமா..?

Kokila

Next Post

சுனிதா வில்லியம்ஸ் முதல் வினேஷ் போகட் வரை!. 2024ல் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இந்திய பெண்கள்!

Fri Dec 20 , 2024
From Sunita Williams to Vinesh Phogat!. Indian women in global headlines in 2024!

You May Like