fbpx

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!… கே.எல். ராகுல் விலகல்!… இஷான் கிஷன் அணியில் சேர்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுல் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தநிலையில், ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங் செய்கையில் காயமடைந்தார். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதையடுத்துதற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாடாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஐபிஎல்!... அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த 2வது இளம் வீரர் என்ற சாதனை!... பட்டியலில் இடம்பிடித்த யஷஸ்வி ஜெய்ஷ்வால்!

Tue May 9 , 2023
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் உள்ளிட்ட, பல்வேறு சாதனைகளை ராஜஸ்தான் வீரர் யஷஷ்வி ஜெய்ஷ்வால் தனதாக்கியுள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஜான்சென் வீசிய ஓவரில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்து பல சாதனைகளை படைத்தார் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஷ்வால். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய […]

You May Like