உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன், லோவ்லினா போர்கோஹைன், நீது கங்காஸ் மற்றும் ஸ்வீட்டி பூரா நுழைந்துள்ளனர். தங்கப்பதக்கத்தை தட்டிச்செல்வார்களா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்
டெல்லியில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் நான்கு தங்கப்பதக்கம் கிடைக்கும். நான்கு இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன் (50 கிலோ), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), நீது கங்காஸ் (48 கிலோ) மற்றும் ஸ்வீட்டி பூரா (81 கிலோ) ஆகியோர் தங்களது அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இதில் நீது மற்றும் ஸ்வீட்டியின் இறுதிப் போட்டி சனிக்கிழமையும், லவ்லினா மற்றும் நிகாத் ஆகியோரின் ஃபைனல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.
இதில் நிகத் ஜரீன் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். நிது கங்காஸ் 5-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அலுவா பல்கிபெகோவாவை வீழ்த்தினார். இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன், சீனாவின் லி கியானை 4-1 என்ற கணக்கில் வென்று தனது முதல் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சவீதி பூரா 4-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் சூ எம்மான் கிரீன்ட்ரீயை வீழ்த்தினார். லோவ்லினா போர்கோஹைன் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார்
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் லோவ்லினா போர்கோஹைன் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்க்கை எதிர்கொள்கிறார், அதே நேரத்தில் ஸ்வீட்டி பூரா சீனாவின் வாங் லினாவை எதிர்கொள்கிறார். நீது அடுத்து ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் லுட்சைகான் அல்டன்செட்செக்கை சனிக்கிழமை எதிர்கொள்கிறார். அதாவது நீது மற்றும் ஸ்வீட்டியின் இறுதிப்போட்டி சனிக்கிழமையும், லவ்லினா மற்றும் நிகாத் ஆகியோரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.