fbpx

உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு..!! இப்போ அது எங்கு இருக்கு தெரியுமா..?

உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரத்தினக்கலானது 802 கிலோ எடையுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது இலங்கையில் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது. கொருண்டம் என்பது முக்கியமான இரத்தின கல்லின் வகையில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், கொருண்டம் வகையில் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாக தான் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், இது இயற்கையாகவே இந்த அளவுள்ள கொருண்டம் படிகங்களின் கொத்துகள் வேறு எங்கும் பதிவாகியதில்லை.

இது உலகின் அரிதான அருங்காட்சியக இரத்தினங்களில் ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 15,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100% கோதுமையால் தயாரான பீர்..!! விலை எவ்வளவு தெரியுமா..?

Chella

Next Post

உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற இளைஞர் பலி : அதிரடி முடிவெடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்..

Thu Apr 25 , 2024
சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை மகன்கள். இவர்களுக்கு 26 வயது ஆகிறது. இவர்களுள் மூத்த மகனான ஹேமசந்திரன்  உடல் பருமன் அதிகமாக இருந்ததால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று நேற்று அவருக்கு […]

You May Like