அமெரிக்காவில் உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானின் ஏர்கின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டெட்ராய்டில் வாகன கண்காட்சி நடைபெற்றது. இதில் உலகின் முதல் பறக்கும் பைக் கண்காட்சியில் வைக்கப்பட்டது. தொடர்ந்து 40 நிமிடங்கள் பறக்கும் கொண்ட இந்த பைக் சுமார் 6 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கை பார்த்தவர்கள் இதன் திட்டத்தை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். நேரில் பார்த்தவர்கள் இதை நம்ப முடியவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். வருங்காலத்தில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகின்றது. ஜப்பானின் AERQINS என்ற நிறுவனம் இதை காட்சிப்படுத்தியுள்ளது. இன்று இதுதான் பேசுபொருளாக உள்ளது. வலைத்தலங்களில் இந்த பைக்கை பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.