fbpx

’’இலவசமாக காண்டம் வேண்டுமா?’’ .. ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் ..

பீகாரில் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் எம்.டி.யும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் மாணவியிடம் கூறிய கருத்துக்கு பதில் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவி ஒருவர் பேசும் போது இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் கொடுக்க வேண்டும் என அவர் பேசினார். சுகாதாரத்தை பேணிக்காக்கவும் பல கிராம மக்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது இன்றளவும் கடினமாக இருப்பதால் அந்த பெண் இலவச சானிட்டரி நாப்கின்கள் கேட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி , ’’ நீங்கள் ஜீன்ஸ் கேப்பீர்கள் , பின்னர் காலுக்கு காலணி கேட்பீர்கள், அப்படியே இலவசமாக காண்டமும் கேட்பீர்கள்’’ என மோசமான வார்த்தைகள் மூலம் மாணவியை கொச்சைப்படுத்தும்படி பேசி இருந்தார். இந்த வீடியோ வைரலானது.

இதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் எனவும் ஏழு நாட்களுக்குள் விளக்கம் தரவும் உத்தரவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து உணர்ச்சியற்ற அணுகுமுறை கண்டனத்திற்குரியது என கூறியுள்ள மகளிர் ஆணையம் . ஐ.ஏஎஸ். அதிகாரியின் பேச்சை வன்மையாக கண்டுத்ததோடு இது மிகவும் வெட்கக்கேடானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு நிகழ்ச்சியில் , பெண்களுக்கு உதவ அரசாங்கம் தயாராக உள்ளது. எல்லாவற்றையும் அரசு கண்காணித்து வருகின்றது. பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும்’’ எனவும் தெரிவித்துள்ளார்.

Next Post

சென்னையில் ரயில் நடைமேடை டிக்கெட் விலை 2 மடங்கு உயர்வு ….

Thu Sep 29 , 2022
சென்ட்ரல் , எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.  விழாக்காலங்களில் ரயில்வே நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்கள் வருவதால் நடைமேடைகளில் கூட்டத்தை […]

You May Like