பருத்திப்பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர், உடல் எடை குறைக்க உதவுகிறது. மேலும், இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வெரைட்டி ரெசிபிகளை பார்க்கலாம்.
பருத்திப்பால் ஒரு இனிப்புச் சுவையான உணவு வகையாகும். பச்சரிசிமாவு, பருத்திவிதை, கருப்பட்டி, ஏலக்காய், சுக்கு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பருத்திக் கொட்டையில் இருந்து பனைவெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்திப்பால் உடல் அசதிக்கு சிறந்த மருந்தாகும். இந்த பருத்திப்பாலுக்கு மட்டும் ஒரு விசேஷம் உண்டு.
பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு. இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. நெஞ்சு சளியை விரட்டும். ஆகவே மழை, குளிர்க்காலங்களில் அடிக்கடி பருகலாம். மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். இந்த பருத்திவிதைக்கு நெஞ்சுசளியை போக்கும் ஆற்றல் இருக்கிறது. பருத்திப் பாலில் B காம்ப்ளக்ஸ் சத்து இருக்கு. பசி உணர்வை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியை குறைக்கும். நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும். 25 கிராம் பருத்தி இலையை, 100 மில்லி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.
தேவையான பொருட்கள் :
பருத்திக் கொட்டை – 100 கிராம்
பச்சரிசி – 3 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 300 கிராம்
சுக்கு – சிறிது அளவு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
செய்முறை :
* பருத்திக் கொட்டையை நன்கு ஊறவைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
* அரைத்த பச்சரிசி மாவை பருத்தி பாலுடன் கலந்து அடுப்பில் ஏற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
* பால் கலவை சிறிது கெட்டியாக பொங்கி வரும் போது வெல்லம் கலந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
* வெல்லம் முழுதும் கரைந்தவுடன் சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்க வேண்டும்.
கருப்பட்டியுடன் செய்முறை :
* பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
* காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
* கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் பருத்தி விதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
* இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விட வேண்டும்.
* சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி, ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.
Read More : வீட்டிலுள்ள பொருட்களே போதும்..!! உங்கள் உதடுகளை மென்மையாக மாற்ற சூப்பர் டிப்ஸ்..!!