fbpx

Wow!. AI மூலம் இயங்கும் யோகா மேட்(YogiFi) அறிமுகம்!.

YogiFi: செயற்கை நுண்ணறிவின்(AI) வளர்ச்சி, பெரும் முன்னேற்றத்தைக் கண்டுவருகிறது. 1950களில் ஜான் மெக்கார்த்தி என்ற விஞ்ஞானி செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையை உருவாக்கினார். இதனை அடுத்து, 1956இல் அதிகாரப்பூர்வமாக செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டது. 1960-இல் எலிசா என்ற சாட்பாட் மூலம் ரோபோ ஷேக்கியைத் தொடர்ந்து, 1970 முதல் 1980களுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மறுமலர்ச்சி ஏற்பட்டது.

1990களில் வீடியோ மற்றும் பேச்சு செயலாக்கம் முன்னுக்கு வந்ததைத் தொடர்ந்து, 2000களில் முகம் அடையாளம் காணும் முறை (facial recognition), உதவியாளர்கள் (personal assistants), தானியங்கி வாகனம் (autonomous vehicles), பட உருவாக்கம் போன்றவை வந்தன. கடந்த ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பெற்ற வளர்ச்சியை விட, 2023-இல், செயற்கை நுண்ணறிவு மிகவும் மேம்படுத்தப்பட்டதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது.

அந்தவகையில், கடந்த ஆண்டுகளில் சில துறைகளில் மட்டுமே தடம் பதித்திருந்த செயற்கை நுண்ணறிவு, 2023இல் எல்லா துறைகளிலும் தடம் பதித்து, மனித குலத்தையே நடுங்கச் செய்தது. கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பங்களிப்புடன் ஏஐ எழுச்சி பெற்று வருகிறது.

2022ஆம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை (Chat Gpt) அறிமுகம் செய்தபின், 2023-இல் சாட் ஜிபிடி மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. இது மட்டுமல்லாமல், அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் செயலி வடிவில் வந்தது.

இதற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் பார்ட் (Bard), ஜெமினி (Gemini) போன்ற சாட்போட்டையும், கோரா (Quoro) நிறுவனம் போ என்ற சாட்போட்டையும் அறிமுகம் செய்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங்க் (Bing) என்ற தேடு இயந்திரத்தையும் கொண்டு வந்தது.

இது மட்டுமல்லாமல், ஆபிஸ் (MS Office) மென்பொருள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு சேவையை கொண்டு வந்தது. மெட்டா (Meta) நிறுவனம் வாட்ஸ் அப், மெஸஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் செயற்கை நுண்ணறிவு சேவையை கொண்டு வந்தது. மேலும் கூகுள் நிறுவனம் வீடியோ உருவாக்கும் வகையில் யூடியூப்பிலும், செயற்கை நுண்ணறிவு சேவையை கொண்டு வந்தது. மேலும் எலான் மஸ்க்கின் xAi நிறுவனம் Grok என்ற சாட்பாட்டையும் கொண்டு வந்தது.

நோய் கண்டறிதல், மருந்து கண்டுபிடிப்புகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தியது. pathAI போன்றவை புற்றுநோய் கண்டறிதல் விகிதங்களை உயர்த்தியது. Atomwise சிகிச்சை குறித்த அடையாளத்தை துரிதப்படுத்தியது. மேலும், செயற்கை நுண்ணறிவு காரணமாக டெஸ்லா மற்றும் வோமோவின் தன்னியக்க வாகனங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டன.

அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சிபெற்று வருகிறது. அந்தவகையில், ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் ஆதரவுடன் இயங்கும், வெல்னெஸ் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய யோகா மேட்டை தயாரித்துள்ளது.

இந்த ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இயங்கும் யோகா மேட்டை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரிடம் நேற்று வழங்கப்பட்டது.

இது குறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளதாவது, இந்த யோகா மேட் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்ப்யூட்டர் விஷன் ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, நம் மொபைல் போன் போன்றவற்றுடன் இணைத்து பயன்படுத்த முடியும். இந்த மேட்டில் உள்ள சென்சார்கள், பயனாளிகள் செய்யும் யோகா பயிற்சியின் அடிப்படையில், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும். எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் கற்று தரும்.

Readmore: ஃபிக்சட் டெபாசிட் பண்ணப் போறீங்களா? இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!

English Summary

YogiFi, AI-powered Yoga Mat developed by Indian startup: Here’s how it works

Kokila

Next Post

ITR தாக்கல் 2024!. FD, RD மற்றும் சேமிப்பு கணக்கு வட்டிக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது?

Tue Jun 25 , 2024
ITR Filing 2024: How FD, RD and savings account interest is taxed

You May Like