fbpx

ஆஹா!… இவ்வளவு கம்மி விலையா?… இனிமேல் இதில் தான் உணவு ஆர்டர் பண்ணனும்!… புதிய சேவை அறிமுகம்!

ஸ்விகி, சோமொட்டை விட பாதி விலையில் உணவு வழங்கும் ஓ.என்.டி.சி (ONDC) தொழில்நுட்பம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளானது தற்போது மிகவும் அதிகமாகி கொண்டு வருகிறது. இந்த உணவு டெலிவரி வணிக போட்டியில் சோமட்டோ (Zomato) மற்றும் ஸ்விகி (Swiggy) இரண்டும் முன்னணி வரிசையில் இயங்கி கொண்டு இருக்கின்றன. இந்த ஆப்கள் மூலம் உணவகத்தில் இருந்து பயனாளர்கள் வீட்டிற்கு குறுகிய நேரத்தில் உணவை வழங்கி வருகின்றன. இருந்தும், தற்போது அந்த ஆப் நிறுவனங்கள் செயலி பராமரிப்பு கட்டணம் என குறிப்பிட்ட தொகையை பயனர்களிடம் வசூல் செய்வது தற்போது பேசுபொருளாகியுள்ளது. தற்போது இந்த உணவு டெலிவரி சந்தையை மையப்படுத்தி, ONDC (Open Network for Digital Commerce) எனும் புதிய திறந்த நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளமானது, வணிகத்திற்கும் நுகர்வோருக்கும் இடையிலான இடைத்தரகர்களைக் குறைத்து நேரடியாக பயனர்கள் உணவகத்தை நாடும் நிலை ஏற்படுத்தி தரப்படும்.

இந்த சேவையானது தற்போது முதற்கட்டமாக பெங்களூரு போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது . மேலும் ONDC ஆனது வணிகர்ளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரே நேரத்தில் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. ONDC என்பது ஒரு செயலி அல்ல. இது வாடிக்கையாளர்களுடன் வணிகங்களை இணைக்க, டிஜிட்டல் மயமாக்க உதவும் சேவை ஆகும். ONDC தளத்தின் மூலம் பயனர்கள் பட்டியலிடப்பட்டுள்ள வணிகர்களிடம் இருந்து உணவு மட்டுமல்ல, பிற பொருட்களையும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Kokila

Next Post

தமிழ்நாடு அமைதியான மாநிலம்!... குழப்பத்தை ஏற்படுத்தினால் காது கொடுத்து கேட்டுக்கொண்டிருக்க முடியாது!... சுப்ரீம் கோர்ட்!

Tue May 9 , 2023
தமிழ்நாடு அமைதியான மாநிலம், போலி வீடியோக்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தினால், இதற்கு எல்லாம் நாங்கள் காது கொடுத்து கேட்டு கொண்டிருக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களைப் பரப்பியது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. […]

You May Like