இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள 38,000 சதுர அடி பரப்பளவு கொண்ட தனது பிள்ளையார் மாளிகையை பிரபல ஹாலிவுட் ஜோடி ஜெனிபர் லோபேஸ் மற்றும் பென் ஆஃப்லெக் ஆகியோருக்கு ரூ.494 கோடி (அமெரிக்க டாலர் 61 மில்லியன்)க்கு விற்றுள்ளார்.
இந்த பிரம்மாண்டமான மாளிகை ஒரு கலைப் பொக்கிஷமாகவே திகழ்கிறது. 12 படுக்கை அறைகள் கொண்ட இது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. அறிக்கைகளின் படி, இந்த பங்களாவை ஹாலிவுட் தம்பதிகளான ஜெனிஃபர் லோபஸ் மற்றும் அவரது கணவர் பென் அஃப்லெக் ஆகியோர் கோடிக்கணக்கில் மதிப்பிடக்கூடிய தொகைக்கு வாங்கியுள்ளனர். அந்த தொகையில் ஒரு தனியார் ஜெட் விமானத்தையும் எளிதாக வாங்க முடியுமென்று கூறப்படுகிறது.
இஷா அம்பானியின் வீடு 38,000 சதுர அடியில் பரவியுள்ள ஒரு பிரம்மாண்ட கட்டிடம். இதில் 12 படுக்கை அறைகள் மற்றும் 24 குளியலறைகள் உள்ளன. இந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியும் மிக நவீனமாக, உலகத் தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு சாதாரண வீடல்ல, ஒரு லக்ஸூரி லைஃப்ஸ்டைல் அனுபவமாகும். இந்த வீட்டில் ஒரு உட்புற பிகிள்பால் மைதானம் ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு சலூன் மற்றும் ஒரு ஸ்பா ஆகியவையும் உள்ளன.
இன்ஃபினிட்டி நீச்சல் குளம், வெளிப்புற சமையலறை, பல புல்வெளிகள் மற்றும் பரந்து விரிந்த தோட்டம், இந்த வீட்டில் உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் இரண்டும் உள்ளன.இந்த அளவுக்கு வசதிகள் கொண்ட வீடு, ஒரு ஐந்து நட்சத்திர விடுதி அல்லது ரிசோர்ட் போன்ற அனுபவத்தை தரக்கூடியது. அறிக்கைகளின்படி, இஷா அம்பானி தனது இந்த பிரமாண்ட சொத்தை ஹாலிவுட் பிரபல தம்பதியருக்கு ரூ. 508 கோடிக்கு விற்றுள்ளார். மேலும், இந்த மாளிகைக்கான ஒப்பந்தமும் 2023 இல் கையெழுத்தானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமல்லாமல், இஷா அம்பானி பெயரில் இன்னும் பல சொத்துகளும் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, மும்பையில் கடலைநோக்கிய அழகான பங்களா. இந்த பங்களா, அவரது மாமனார் திருமண பரிசாக வழங்கியுள்ளார்.
இஷா அம்பானி, இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான அனந்த் பிரமாலுடன், 2018ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அனந்த் பிரமால், பிரமால் குழுமம் (Piramal Group) எனும் பெரும் வணிக இராச்சியத்தின் வாரிசு ஆவார். தம்பதியினர் தங்கள் மும்பை வீட்டிற்கு குலிதா என்று பெயரிட்டனர், இது வைரம் போன்ற வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் விலை ரூ.500 கோடி என்று கூறப்படுகிறது.
Readmore: அதிர்ச்சி!. குழந்தைகளிடம் புற்றுநோய் பாதிப்பா?. இந்த 4 காரணங்கள்தான்!. எச்சரிக்கும் மருத்துவர்கள்!