fbpx

வாவ்..!! கேட்கவே ரொம்ப நல்லா இருக்கே!! Mr, Ms , Mrs என்று எழுதுவதன் பின்னணி தெரியுமா?

பொதுவாக ஆங்கிலத்தில் பெயர்களை எழுதும்போது பாலினத்திற்கு ஏற்ப Mr, Ms, Mrs என்று பயன்படுத்துவோம். இதை ஏன் பெயருக்கு முன்னால் எழுதுகிறோம். இதற்கான காரணம் என்ன அர்த்தம் என்ன என்று எப்போதாவது யோசித்தது உண்டா?

நம் வாழ்வில் அன்றாடம் பேசப்படும் பல வார்த்தைகளை பற்றி நாம் அதிகம் யோசிக்கக்கூட மாட்டோம். எல்லோரும் சொல்கிறேன் என்ற நிலையிலேயே பல வார்த்தைகளை கடந்து விடுகிறோம். சிறுவயதிலிருந்தே நாம் இதை எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்துகிறோம், ஆனால் அதன் முழுமையான விரிவாக்கமோ அதன் பொருளோ தெரிவதில்லை. Mr, Ms, Mrs என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1500-களில் ஆங்கிலத்தில் ஒரு மதிப்புமிக்க ஆணை மிஸ்டர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதன் சுருங்கிய வடிவமே Mr இது திருமணம் ஆகாத மற்றும் திருமணம் ஆன ஆண்கள் என அனைவருக்கும் பொருந்தும். மேலும்
பெண்களை குறிக்க Miss என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஒருவர் திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று எப்படி இருந்தாலும் , அவரை குறிப்பிடும்போது Ms என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டது.

பின்னர் திருமணம் ஆன பெண்களை தனித்துவமாக காட்டவேண்டும் என்ற எண்ணம் உதித்துள்ளது. அதனால் mister என்ற வார்த்தையின் பெண்பால் பெயராக ஒரு வார்த்தை வேண்டும் என்று mistress என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. அதன் சுருங்கிய வடிவமே Mrs. ஆங்கில வார்த்தையான mistress கொஞ்சம் திரிந்து இப்போது missus என்று குறிப்பிடப்படுகிறது.

Read More: RCB வெற்றிக்கு தோனி காரணமா? – தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்!

Baskar

Next Post

ஆண்கள் இந்த உணவை தொடவே தொடாதீங்க!! விந்துணுக்கள் குறையுமாம்!!

Mon May 20 , 2024
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் சிக்கன், மீன் போன்ற உணவுகளை சாப்பிடுபவர்களைவிட, பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவு என்பது தெரிய வந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். இந்த உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்மை குறைவுக்கும் […]

You May Like