தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். ஒரு செல்போனுக்கு மிக அத்தியாவசியமானது சார்ஜ் மற்றும் இணைய சேவை. ஆனால், இவை இரண்டுமே இல்லாமல் புதிய மொபைல் போனை டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் தயாரித்து வெளியிட உள்ளதாக கூறப்படுவது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், பல்வேறு துறைகளில் நம்பர் ஒன்னாக இருக்கும் நிலையில், அடுத்ததாக மொபைல் தயாரிப்பு நிறுவனத் தொழிலில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. எலான் மாஸ்க் நிறுவனம் தயாரிக்கும் மொபைல் போன் வித்தியாசமாக இருக்குமாம். இந்த மொபைல் போனை பயன்படுத்துவதற்கு இன்டர்நெட் தேவையில்லையாம். அதாவது, இந்த போனை ஸ்டார்லிங்க் சேட்டிலைட் உடன் இணைக்கப்பட்டால், இன்டர்நெட் இல்லாமல் போனை பயன்படுத்தலாம்.
அதேபோல், பலருக்கும் தற்போது சார்ஜிங் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், எலான் மஸ்க் தயாரிக்கும் போனில் அந்த பிரச்சனை இருக்காது. ஏனென்றால், சார்ஜிங் வசதிக்கு சோலார் எனர்ஜி வசதியை பெற்று இருப்பதால், சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. போனில் சார்ஜ் இல்லாத நேரத்தில் ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் செய்து கொள்ளும். எலான் மஸ்க் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த புதிய போன் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Read More : சிரியாவின் பண்டைய நகரத்தை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!! 36 பேர் கொலை, 50 பேர் காயம்..!!