fbpx

Wow..!! ’இனி பட்டனை தட்டினால் பிரியாணி கிடைக்கும்’..!! சென்னையில் இப்படி ஒரு கடையா..?

இந்தியாவிலேயே முதல்முறையாக மெஷின் மூலம் பிரியாணி சப்ளை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மிக எளிதாக பிரியாணியை வாங்க முடிவதாக இதனை பயன்படுத்திய மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முதல் பிரியாணி விற்பனை இயந்திரம் சென்னை கொளத்தூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த பிரியாணி மிஷினை நிறுவியுள்ளது. மிஷின் மூலம் பிரியாணி சப்ளை செய்யும் இந்தியாவின் முதல் முயற்சி இதுதான் என்ற பெருமையும் இதற்கு உள்ளது.

முதற்கட்டமாக 12 இடங்களில் இருந்து மிஷினை வைத்துள்ளதாகவும், பின்னர் சென்னை முழுவதும் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வருங்காலத்தில் இந்தியா முழுவதும் ஏராளமான மெஷின்களை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பிரியாணி வாங்கும் முறை மிகவும் எளிதாக இருப்பதாக இதை பயன்படுத்திய மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த மிஷின் அருகே சென்று தொடுதிரையில் உள்ள பிரியாணி மெனுவை பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த வகை பிரியாணி வேண்டும் என்பதை தேர்வு செய்து அதன் பின்னர் க்யூஆர் கோடு அல்லது கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகு அடுத்த நிமிடம் உங்களுக்கு பிரியாணி வெளியே வரும்.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இந்தியா முழுவதும் இயந்திரங்கள் மூலம் பிரியாணி கொடுக்க வேண்டும் என்பதே தனது கனவு என்று தெரிவித்துள்ளார். இந்த மெஷினில் பிரியாணி வாங்கியவர்கள் தங்களுடைய அனுபவங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இனிமேல் பிரியாணி வேண்டும் என்பதற்காக கடைக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மிஷின் அருகே சென்று பட்டனை தட்டினால் போதும் உடனே சுடச்சுட பிரியாணி உங்கள் முன் வரும்.

Chella

Next Post

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு..!! தேர்வு தேதி அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sun Mar 12 , 2023
வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி-1சி பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது. இதனால், ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு, 29 மாவட்டங்களில் ஏப்ரல் 20ஆம் தேதி காலை […]

You May Like