fbpx

அடடே இந்த ஐடியா நல்லா இருக்கே!… இனிமேல் பழைய பாட்டில்களை தூக்கி எறியாதீர்கள்!… பயனுள்ளதாக்குவோம்! எப்படி தெரியுமா?

பழைய மது பாட்டில்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்திய தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறியாமல் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பழைய பாட்டில்களில் அழகான சிறு செடிகளை வளர்க்கலாம். வீட்டின் ஜன்னல், மேசையில் வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வீட்டு அலங்காரத்திற்கு பழைய பாட்டில்களில் விளக்குகளை வைத்து ஜொலிக்கவிடலாம். பாட்டில்களுக்குள் விதவிதமான வண்ணங்களில் தண்ணீரை நிரப்பி அதனை சுற்றி சீரியல் விளக்குகளை போட்டுவிடலாம். பழைய பாட்டில்களை சுத்தப்படுத்தி அதில் விரும்பிய ஓவியங்களை வரைந்து கொண்டால் பார்ப்பதற்கு அழகாகவும் வண்ணமையமாகவும் தோன்றும். பாட்டில் ஓவியங்கள், பாட்டில் செடி வளர்ப்பு போன்ற விஷயங்களில் ஆர்வமாக ஈடுபட்டால் மன அழுத்தம் குறையும்.

ஃப்ரிட்ஜில் தண்ணீர் வைப்பது முதல் சமையல் எண்ணெய் ஊற்றி வைப்பது வரை பிளாஸ்டிக் பாட்டில்களை பல வகைகளில் பயன்படுத்தலாம். பழைய தண்ணீர் பாட்டிலை பாதியாக வெட்டி, பேனா ஸ்டாண்ட் , செடி வளர்ப்பு பயன்படுத்தலாம்.

Kokila

Next Post

முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்க!... தினமும் குடியுங்கள் இந்த ஜூஸ்!... டிரை பண்ணி பாருங்கள்!

Sat May 6 , 2023
தினமும் இந்த ஆரோக்கியமான ஜூஸை குடித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். ஊட்டச்சத்து குறைபாட்டால் சிலருக்கு உதிர்தல் அடர்த்தி குறைதல் மற்றும் வறட்சி ஆகியவை ஏற்படலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை தேர்வு செய்வதன் மூலம் இப்பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம். முடி உதிர்வதைத் தவிர்க்க, இந்த 5 ஆரோக்கியமான ஜூஸை தினமும் குடிக்கவும். இது குறித்து இங்கே விரிவாக காணலாம்.நெல்லிக்காய் உண்மையில் மனித உடலை மீட்டெடுக்க […]

You May Like