இந்தியாவில் இருந்து ரூ.88,032 கோடியை காணவில்லை என ஏற்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 88,032 கோடி மதிப்பிலான 500 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டதாகவும்.
ஏப்ரல் 2015 – டிசம்பர் 2016 காலகட்டத்தில் 8,810.65 மில்லியன் எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்ட நிலையில், 1,760.65 மில்லியன் நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்திய ரிசர்வ் வங்கி பணத்தாள் அச்சடிக்கும் இயந்திரங்களால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக ஊடகங்களில் சில பிரிவுகளில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்தி சரியானவை அல்ல என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. “இந்த அறிக்கைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அச்சகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் தவறான விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அச்சு இயந்திரங்களில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் சரியாகக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறி உள்ளனர்.