fbpx

WTC Final Day3!…வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!… 295 ரன்கள் முன்னிலை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 123/4 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 296 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்திருந்தது, இதையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கியது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் வார்னர்(1) மற்றும் க்வாஜா(13) ரன்களுக்குள் விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் லபுஸ்சன் நிதானமாக விளையாடினர். இருந்தும் ஸ்மித் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார். இது அவர் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவிடம் 8வது முறையாக விக்கெட்டை இழக்கிறார்.

இதையடுத்து களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்த நிலையில் இந்த முறை 18 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ன்கள் எடுத்து விளையாடி வருகிறது. லபுஸ்சன் 41* ன்களும், க்ரீன் 7* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் உமேஷ் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Kokila

Next Post

WTC Final!... தொடர்ச்சியாக 3 அரைசதங்கள்!... ஓவல் மைதானத்தில் புதிய சாதனை படைத்த ஷார்துல் தாக்கூர்!

Sat Jun 10 , 2023
லண்டன் ஓவல் மைதானத்தில் ஷார்துல் தாக்கூர் தொடர்ச்சியாக 3 அரைசதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி இந்த ஸ்கோரை எட்டும் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை. முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் ஜடேஜா, ரஹானே மற்றும் ஷார்துல் தாக்குர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி […]

You May Like