WWE எனப்படும் மல்யுத்த போட்டியில் மிகவும் பிரபலம் வாய்ந்த வீரர் என்றால் அது தி அண்டர்டேக்கர் தான் (The Undertaker). அண்டர்டேக்கர் கதாபாத்திரத்தை ஏற்று கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் மார்க் கால்வே, கடந்த 2020இல் WWE-வில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி அதிர்ச்சி அளித்திருந்தார். தற்போது அவருக்கு 59 வயது ஆகிறது.
இந்நிலையில், மீண்டும் அவர் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஏனென்றால், WWE-வில் நடத்தப்படும் பெரிய தொடர் என்றால் அது ரசில் மேனியா தான். இதில் அண்டர்டேக்கர் தொடர்ந்து 21 முறை வென்று சாதனைப் படைத்துள்ளார். இந்நிலையில் தான், மீண்டும் ரசில் மேனியா நடப்பாண்டு நடைபெறவுள்ளது. இதில், அண்டர்டேக்கர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அண்டர்டேக்கர், இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். தனது உடல் வலு குறைந்து விட்டதாகவும், உடலில் பல்வேறு பாகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது கால் முட்டி தேய்மானம் அடைந்ததால், புதிய முட்டி பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதேபோல், முதுகுத்தண்டு, கழுத்து, கீழ் முதுகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பிரச்சனைகள் இருக்கிறது. இதனால், இனி தன்னால் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க முடியாது. இருப்பினும் ஏதேனும் கௌரவத் தோற்றத்தில் வேண்டுமானாலும் தாம் வர வாய்ப்பு இருக்கிறாது. ஆனால், சண்டையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Read More : ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிரடி மாற்றம்..!! கோவை, தேனிக்கு புதிய ஆட்சியர்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!