கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அக்டோபர் 18ஆம் தேதி வரை புயல் சுழற்சி காரணமாக கன முதல் மிதமான மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலநக்கலி பல்வேறு பகுதிகளை மலை காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளது. மரங்கள் விழுந்துள்ளதால் பல பகுதிகளை போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.