fbpx

4 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்..!! ஆக்ரோஷமாகும் கடல் அலைகள்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அங்கு 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (ஜனவரி 5) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்று தேசிய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு பகுதியில் நாளை (ஜனவரி 5) வரை பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Chella

Next Post

உலகின் சக்திவாய்ந்த Passport!… முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?… விசா இல்லாமல் இத்தனை நாடுகளுக்கு பயணிக்கலாமா!

Thu Jan 4 , 2024
2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் (UAE Passport) உலகின் மிகவும் சக்திவாய்ந்த பயண ஆவணமாக பெயரிடப்பட்டுள்ளது. Arton Capital வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது. தற்போது, UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து, ஜெர்மனி, ஸ்பெயின், […]

You May Like