fbpx

புரட்டி போட்ட கனமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

கேரளா மற்றும் கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..

நாடு முழுவது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல பகுதிகள் தொடர் கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் கேரளாவில் கடந்த சில தினங்களாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 9 அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்த அடைமழையால் கொச்சி நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. பெரும்பாலான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எர்ணாகுளம் தெற்கு மற்றும் வடக்கு ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் சிக்னலில் பழுது ஏற்பட்டது. இதனால் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே கேரளா முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல, கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால், பெங்களூருவில் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழையால் மைசூரூ – பெங்களூரு சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

மக்களே கவனம்.. 4 மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை எச்சரிக்கை.. 5 நாட்களுக்கு கனமழை தொடரும்..

Wed Aug 31 , 2022
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் […]

You May Like