fbpx

அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..? தாமதம் செய்யாதீங்க..!!

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தற்போது மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்கு பிறகே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.

மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், உடல் வலி, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் தென்படும். மஞ்சள் காய்ச்சல், தடுப்பூசி பற்றிய விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களில் ஏடிஎஸ் ஜேசிஎஃப்டி என்ற ஒரு வகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்கள் மனிதனையோ அல்லது குரங்கையோ கடிக்கும்போது வைரஸ் தாக்குகிறது. இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. இந்த நோய் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிகமாக உள்ளது. இது குணப்படுத்த முடியாதது. ஆனால், மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மூலம் அதைத் தடுக்கலாம். மஞ்சள் காய்ச்சல் ஏற்பட்ட முதல் 6 நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் ஏற்படும்.

மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கொசுக்கள் அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆபத்தில் உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) நம்பகமான ஆதாரத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் 2,00,000 பேர் தொற்றுநோயைப் பெறுகிறார்கள்.

Read More : ’அது சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல’..!! பகிரங்க மன்னிப்பு கேட்ட யூடியூப் நிறுவனம்..!!

Chella

Next Post

பெடரேசன் கோப்பை 2024!… ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

Thu May 16 , 2024
Neeraj Chopra: 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 3 […]

You May Like