fbpx

”ஆமா, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு”..!! அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை..!! அதிர்ந்துபோன பெண் வீட்டார்..!! காவலர் செய்த காரியத்தை பாருங்க..!!

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலரை, பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக அடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்டம் பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிறார். இவர் களியக்காவிளை எல்லை சோதனைச் சாவடியில் பணியாற்றியபோது, மார்த்தாண்டத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண் கூறியுள்ளார். அதற்கு தனக்கு சொந்த ஊர் சென்னை, மணிமுத்தாறில் சிறப்பு பணியாக வந்துள்ளேன். என் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி காலம் கடத்தி வந்துள்ளார் காவலர் ராஜேஷ்.

இந்நிலையில், பெற்றோருக்கு என் திருமணத்தில் விருப்பம் இல்லை. உன்னை திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறேன். திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் மட்டும் தான் வருவேன் என்று ராஜேஷ் கூறியுள்ளார். அதை நம்பி திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நேற்று (ஜூன் 26) கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண்ணின் உறவினரான பெண் போலீஸ் ஒருவர் திருமணத்தில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ் அப் குரூப்பில் போட்டுள்ளார்.

இதைப் பார்த்த அந்த மண பெண்ணின் உறவினர் ஒருவர், இவர் என்னோடு போலீசில் வேலை பார்த்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று கூறியுள்ளார். இதையடுத்து விசாரித்த போது, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை ராஜேஷ் ஒப்புக்கொண்டார். இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி ராஜேஷ் தப்பிச் செல்ல முயன்ற போது பெண்ணின் குடும்பத்தினர் ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பட்டப்பகலில் நடுரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்..!! என்ன காரணம்..? தீயாய் பரவும் வீடியோ..!!

English Summary

The constable, who had concealed his first marriage and married a second time, was beaten up by the girl’s relatives and handed over to the police.

Chella

Next Post

Jio New 5g Plans | ரூ.600 வரை உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Thu Jun 27 , 2024
Jio has announced a hike in cell phone charges.

You May Like