fbpx

‘ஆமா இது ஆபாசப் படம் தான்’..!! ’தமன்னா மட்டும் ஒழுங்கா நடிச்சிட்டாங்களா’..? வறுத்தெடுத்த கே.ராஜன்..!!

ராரா சரசுக்கு ராரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், “இப்படி ஒரு பட நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு விட்டார்களே என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். காரணம் ட்ரெய்லர் அப்படி இருந்தது. இது ஆபாசப்படம். அதற்குத்தான் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதை ரசிக்க ஆள் இருக்கிறார்களா என்றால் இருக்கிறது.

இதற்கென்று ஒரு கூட்டமே இருக்கிறது. அண்மையில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படத்தில் ஒரு பெரிய நடிகை, இந்தப்படத்தில் காண்பித்ததை விட நாகரீகமாக நடித்து விட்டாரா என்ன? நடிகை தமன்னா ஆடியதை விடவா இதில் மோசமாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குநரை நான் பாராட்டுகிறேன். இங்கு காட்டப்படுவது போல விஷயம் நாட்டில் நடக்கிறதா என்றால், நடக்கிறது. அதில் ஒரு விஷயத்தை எடுத்து இதில் சொல்லியிருக்கிறார்கள். கெளதமி ஏன் இவ்வளவு வாதங்களை செய்தார் என்று தெரியவில்லை.

நக்மா என்ற பெயரை நீங்கள் வைக்கவே கூடாது. காரணம், அது ஒரு அமங்கலமான பெயர். இப்போது வரக்கூடிய படங்களில் வன்முறை அதிகமாக இருக்கிறது. அதனை பெரிய நடிகர்கள் கையில் எடுக்கும் போது, இளைஞர்களும் அதனை ஃபாலோ செய்வார்கள். ஆனால், இந்தப்படத்தில் அப்படியான விஷயங்கள் ஏதும் இல்லை.” என்று பேசினார்.

Chella

Next Post

அகதிகள் முகாம் மீது தாக்குதல்..!! காசாவில் இன அழிப்பு..!! தடுக்க தவறிய ஐநா..!! இயக்குனர் திடீர் ராஜினாமா..!!

Wed Nov 1 , 2023
காசா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, காசாவில் இனஅழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் இப்ராஹிம் பியாரி. இவரை குறிவைத்து தரையிலும், வான்வழியிலும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. […]

You May Like